Friday 10 November 2017

கோபியர் கொஞ்சும் ரமணா


கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோபிகைகளுடன் இருந்ததையும், மாயச்செயல் புரிந்து எதிரிகளை ஜெயித்ததையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதற்கான விளக்கத்தை அளிக்கிறார் சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி. கிருஷ்ணர் பல கோபிகைகளுடன் இருந்ததை லவுகீகமாக (உலகியல் காதல்) எடுத்துக் கொள்ளக்கூடாது. ராமாவாதரத்தில், ராமனை முனிவர்கள் தங்கள் அருகிலேயே வைத்து பூஜிக்க விரும்பினார் கள். அந்த ஆசையை அடுத்த அவதாரத்தில் நிறைவேற்றி வைப்பதாக கூறினார் பகவான்.அந்த ரிஷிகளெல்லாம் கோபிகைகளாக இப்பிறவியில் வடிவெடுத்து கண்ணனை அடைந்தனர். அவர்களுடன் பகவான் விளையாடினார். தன்னை அன்புடன் ஆராதிக்க வாய்ப்பு தந்தார். ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்கள் இதை அறிவார்கள்.

No comments:

Post a Comment