Friday, 23 June 2017

நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா ?

நெற்றியில் மூன்று பட்டை க்கான பட முடிவு

கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன ?

ஹோமங்கள் பொருட்கள் க்கான பட முடிவு

முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.

பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.
தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.
பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.
நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.
தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.
அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன ?

துளசி நீர் க்கான பட முடிவு

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது. வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

இன்று நாள் எப்படி ?

பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் என்ன ?

murugan க்கான பட முடிவு

ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.

Thursday, 22 June 2017

ருத்ராட்சம் அணிய வேண்டிய விதிமுறைகள் யாவை ?

ருத்ராட்சம் க்கான பட முடிவு

விபூதியும், ருத்ராட்சமும் சைவ சமயத்தின் உயர்ந்த சின்னங்கள். சிவனடியார்கள் இவ்விரண்டையும் தம் இரு கண்களாகப் போற்ற வேண்டும். இரண்டுமே சிவபெருமானுடைய அம்சங்கள். எனவே, இறைவன் சன்னதியில் எப்படி பயபக்தியுடன் இருக்கிறோமோ, அதுபோல ருத்ராட்சம் அணிபவர்கள் பய பக்தியுடனும், ஆசாரத்துடனும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் மட்டும் இதை அணிவது என்று இருந்தது.

வீட்டில் பீரோவை எந்தத் திசையில் வைப்பது நல்லது ?

பீரோ க்கான பட முடிவு

பூஜையறை பக்கத்தில், தனியாக லாக்கர் ரூம் அமைத்து அதில் வடக்கு நோக்கி பீரோவை வைப்பது நல்லது. இப்படி செய்ய வசதியில்லாதவர்கள் தங்கள் அறையிலேயே வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்.