Wednesday, 30 August 2017

கடவுளுக்கு வேண்டியது உண்மையான அன்பு: நாட்டையே ஆண்ட செருப்பின் ரகசியம்

Image result for ராமன்

சீதையை‬ மணம் செய்து கொண்டு ‎அயோத்திக்குத்‬ திரும்பினார் ராமபிரான்.

நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் ‪மித்ரபந்து‬ என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான்.

அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு ‪#‎பாதுகைகள்‬ இருந்தன.

வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள்.

அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது.

எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப ‪#‎காலணிகளையா‬ தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான்.

அதனை கவனித்துவிட்ட ராமபிரான்,

அவனை அருகே அழைத்தார்.

உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து.

ராமபிரான் ‪‎வனவாசம்‬ செல்லப் புறப்பட்டபோது,

தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்! என்று கேட்டு அனுமதி வாங்கினார்.

கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கினார்,

விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன! என்றார்.

உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர், ‪‎அயோத்தியின் அரியணையில்‬ அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

நீங்கள் உங்களால் முடிந்ததை மனப்பூர்வமான பக்தியுடன் அன்புடன் அவரது திருவடிகளில் சமர்ப்பியுங்கள்.

அது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும். இறைவனுக்குப் பிரியமானதாகவும் இருக்கும்.

Tuesday, 29 August 2017

சுமங்கலி பூஜை செய்யப்படுவதன் நோக்கமும் அதை செய்தால் ஏற்படும் அற்புதமான பலன்களும்

Image result for தாலி

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது.

பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.

சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள்.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு  நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும்.

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.

இதில், ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவதால், இதற்கு, “மங்கலப் பெண்டுகள்” என்றும் பெயர் உண்டு.

இது தற்காலத்தில் மருவி, “மங்கிலிப் பூண்டு” என்று வழங்கப் படுகிறது.

வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் , மகனுக்கு செய்யும்போது , வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம்.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும்.

வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், 

மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.

மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது.

இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம்.

அல்லது  கன்யா பெண்களாகவும் இருக்கலாம்.  அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம்.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும். அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள். இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள்.  இரண்டு புடைவைகள் வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான்.

இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.

இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம்.

இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம்.  அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம்.

அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.

அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர்.

இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம்.

அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம்.

இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம். இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.

அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப் புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.

முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும்.  (புதுப் புடவையை அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், முதலில் அவர்கள் மடிப் புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும்).

இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து,மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும்.சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.

பொதுவாக, புடவை நனைத்துக் கொடுப்பதானால், சிரார்த்த சமையலும், அப்படியே புதுப் புடவையைக் கொடுப்பதானால், கல்யாண சமையலும் செய்ய வேண்டும். கல்யாண சமையல் என்றால், மோர்க்குழம்பு, பருப்புசிலி, இது போல செய்ய வேண்டும். எந்த வகை சமையலிலும், கண்டிப்பாக, மஞ்சள் பொங்கல், வாழைக்காய், இவை இரண்டும் இருக்க வேண்டும்.

குளித்து வந்த பெண்டுகளுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜ லம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும்.  பெண்டுகள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை,சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம். அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில்எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும்.

இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

இதே கிரமத்தில் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு,பெண்டுகள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும்.

பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும்.

பகவானிடம் அன்பு இருந்தால் போதும், குடிக்க பாத நீரை கொடுத்த ராதையின் தெய்வீக பக்தி

Image result for ராதை

பகவான் கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மணியுடன் , துவாரகையில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் , கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார் எனக் கேட்டார் ?, ருக்மணி தன் பேரை தான் பகவான் சொல்லுவார் என ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், என் மேல் அதிகமான அன்பு வைத்திருப்பது ராதா தான், என்றார். ருக்மணி கோபத்துடனும், பொறாமையுடனும் உள்ளே சென்று விட்டாள். கிருஷ்ணர் புன்னகைத்து கொண்டார்.

சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.

... அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது பகவானுக்கு கொடுத்தால் , அவரின் வலி தீர்ந்து விடும் என்றார்.

உடனே கிருஷ்ணர் , ருக்மணியிடம் , உன் பாதங்களை கழுவி அந்த நீரை உடனே கொடு , என்னால் வலி பொறுக்க முடியவில்லை என்று கெஞ்சினார்.

திடுக்கிட்டு போன ருக்மணி சொன்னாள், நீங்களோ உலகை எல்லாம் காக்கும் கடவுள் , உங்களுக்கு என் பாதம் பட்ட நீரை அளித்தால், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும் ! இப்படி ஒரு பாவ செயலை செய்ய நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்.

கிருஷ்ணர் , நாரதரை அழைத்து , நீங்கள் பிருந்தாவனத்துக்கு சென்று யாரிடமாவது , என் நிலைமையை எடுத்து கூறி , உடனே அவர்களின் பாதம் கழுவிய நீரை பெற்று வாருங்கள் , என்று அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்திலேயே நாரதர் ஒரு கிண்ணத்தில் நீருடன் வந்தார் . கிருஷ்ணர் அந்த நீரை சிறிது பருகிய உடனேயே அவரின் , வயிற்று வலி சட்டென குணமாகி விட்டது. பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.

ருக்மணி நாரதரிடம் ஆவலாய் , யார் சுவாமி , பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ? என்று கேட்டாள் . நாரதர் சொன்னார் , நான் போய் பிருந்தாவனம் முழுதும் சுற்றி பகவானின் நிலைமையை எடுத்து கூறி கேட்டும் யாரும் கொடுக்க தயாராக இல்லை ! அப்போது ஒரு சிறுமி வந்து தன் பாதங்கள் கழுவிய நீரை கொடுக்க ஓடி வந்தாள். 

அவளது தோழியர் அவளிடம் , ராதை ! நீ பெரும் பாவத்தை செய்ய போகிறாய் ! பகவானுக்கு உன் பாதம் பட்ட நீரை கொடுத்தால் நீ ஏழு ஜென்மத்திற்கும் நரகத்தில் தள்ள படுவாய்! என்று தடுத்தனர்., 

ஆனால் அதற்கெல்லாம் கவலை படாத ராதை கூறினாள், " எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ! ஆனால் என் பகவான் கிருஷ்ணர் , வலியில் அவதி படுவதை என்னால் தாங்க முடியாது " என்று கூறி , அவள் தான் கொடுத்தாள், என்றார்.

ருக்மணி பக்கம் திரும்பிய கிருஷ்ணர் ," பார்த்தாயா ருக்மணி , எனக்காக ராதை நரகத்திற்கு கூட செல்ல தயாராகி விட்டாள் ! அவள் என்னை பற்றி மட்டுமே கவலை பட்டாள் . தனக்கு என்ன நேர்ந்து விடுமோ என தன்னை பற்றி எள்ளளவும் கவலை படவில்லை " இதுவன்றோ உண்மையான அன்பு , எந்த நிபந்தனைகளும் அற்றது ! தியாக உணர்வு கொண்டது !! இதுவே தலை சிறந்த பக்தி , ராதையே தலை சிறந்த பக்தை என்றார், தலை குனிந்து ருக்மணி ஒப்பு கொண்டாள்.

63 நாயன்மார்களும், அவர்களைப் பற்றிய எளிமையான வரலாற்று சுருக்கமும்

Image result for 63 நாயன்மார்கள்

1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanarசிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanarநடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanarதன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர்/Viralminda Nayanarசிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

6.அமர்நீதியார்/Amaraneedi Nayanarசிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்

7.எறிபத்தர்/Eripatha Nayanarசிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanarகொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்/Kannappa Nayanarபக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanarசாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanarமறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanarசிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர்/Anaya Nayanarபுல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி/Murthi Nayanarசந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்

15.முருகர்/MurugaNayanarவழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanarகழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanarதாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanarசிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanarதேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanarபாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanarசுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyarஇறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanarதிருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanarதிருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigalதண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandarஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanarஇறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanarதிருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanarகண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanarசூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanarநிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanarஅன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanarசிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanarபைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanarசுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanarசிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanarநாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanarஎறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyarசுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanarவலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanarமுன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanarவறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanarசிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanarமன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanarவிளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்

47.காரி/Kari Nayanarகாரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanarதிருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanarஇறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanarஅரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanarசிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanarஅரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanarசிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanarவறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanarசிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanarபொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyarசைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanarஎப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanarமுற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanarஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanarசுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்/Isaijnaniyarசுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanarதேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர்

அற்புத சக்தி வாய்ந்த கோவில்களும், அதில் புதைந்துள்ள அபரிமிதமான சக்திளும்

Image result for மதுரை மீனாட்சியம்மன்

1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்ற அழைக்கப்படுகிறார்.

சந்ததி சாபம், வம்ச சாபம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் எளிமையான வழிபாட்டு முறைகள்

Image result for தாம்பூலம்

1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)…இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..

2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது ..

3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும், மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் …

4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும்.

5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், அல்லது இளநீரை தரவேண்டும், இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் , சாபத்தை போக்கும் வல்லமை உடையது.

6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு ) பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை , பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும்,குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.

7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.

8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.

9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள்தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும்.

10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும்

சூட்சும உடலுடன் சித்தர்கள் உலாவரும் பிரும்மரிஷி மலையின் அதிசம் மிக்க சிறப்புகள்

Image result for பிரும்மரிஷி மலை

தமிழகத்தில் உள்ள மலைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் பிரும்ம ரிஷி மலைக்கு இன்னும் கூடுதல் சிறப்பு உண்டு.

பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர்.

அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான, ஸ்ரீகாலாங்கி, ஸ்ரீபுலிப்பாணி, ஸ்ரீகொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை. இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத் தது. இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

 மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது. வருங்காலத்தில் ஸ்ரீதேவி நளினி அம்மனாய் தோன்றி, "ஸ்ரீரங்கா கலி கொண்டு வா!'' என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப்பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

 இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.