Wednesday, 27 December 2017

மழலை வரம் தரும் மாருதி

Image result for aanjaneya

ஒரே ஆலயத்தில் சேவை சாதிக்கும் பத்து ஆஞ்சநேயர்களை ஒரு சேர தரிசிக்க ஆவலா? அப்படியானால் சென்னை பட்டாளம்  மார்க்கெட் அருகில் அங்காளபரமேஸ்வரி கோயில் தெருவில் உள்ள இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் ஆலயத்திற்குப் போக வேண்டும்.

கூப்பிய திருக்கரங்களுடன் கருடபகவான் தரிசனமளிக்க மூன்று நிலை ராஜகோபுரம் வழியே ஆலயத்துள் நுழைகிறோம். நாலரை அடி உயரத்தில் வரசித்தி விநாயகர் பாசம், அங்குசம், மோதகம், அபயக்கரம் காட்டி கொலுவீற்றிருக்கிறார்.வலப்புறம் அனுமனின் பிரதான சந்நதி உள்ளது. முழுவதும் சலவைக்கல்லினாலான தரை தளத்துடனும், மேற்புறம் சித்திர வேலைப்பாடுகளுடனும், அலங்கார மின் விளக்குகளோடும் மூலவர் கருவறை ஒளிமயமாக உள்ளது. அனுமன் சந்நதி முன் சுதை உருவில் மிகப்பெரிய ஆதிசேஷன் காணப்பட அதற்குள் தனித்தனி நாக வடிவங்களில் ராதாகிருஷ்ணர், பாலகிருஷ்ணர், ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் அருள்கின்றனர்.

மூலவரின் கருவறையின் மேலே தியான அனுமனின் சுதை உருவம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. சலவைக்கல்லினாலான வாயிற்படியையும், வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளிக்கதவுகளையும் தாண்டி, அழகான மண்டபத்தில் சுயம்பு மூர்த்தமான செந்தூர அனுமனையும், அதற்கு மேல் உள்ள பீடத்தில் பளிங்கினாலான சஞ்சீவி மாருதியையும் தரிசிக்கிறோம். அவர்களுக்கு இடப்புறம் கிருஷ்ணரின் உற்சவத் திருமேனியும், வலது புறம் சிவபெருமானும் தரிசனம் அளிக்கின்றனர். அதையடுத்து பஞ்சமுக அனுமான். அவருக்கு வலது புறம் அனுமனின் உற்சவத் திருமேனி உள்ளது. செந்தூர அனுமன் துளசி மாலைகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, கதையை தன் கையில் ஏந்தி கம்பீரமாக அருட்காட்சியளிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் வாக்கியப்படி மிகவும் வரப்ரசாதியாகத் திகழும் மூர்த்தியாம் இவர். குறிப்பாக மழலைச் செல்வம் வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு தட்டாமல் பிள்ளை வரம் தரும் பரமகருணாமூர்த்தியாம் இவர்.

தினமும் காலையும், மாலையும் ஏழு மணிக்கு விசேஷ பூஜைகள் இவருக்கு நடக்கின்றன. ஒவ்வொரு அமாவாசைக்கும் செந்தூரத்தினால் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அனுமனின் கருவறையைச் சுற்றிலும் அனுமன் சாலீஸா ஹிந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அனுமனின் தமிழ்த் துதிகளும் காணப்படுகின்றன. இந்த அனுமன் வட இந்திய முறைப்படி ஆராதிக்கப்படுகிறார். கருவறையின் கோஷ்டங்களில் பளிங்கினாலான தியான அனுமன், அபய அனுமன், பஞ்சமுக அனுமன் போன்றோர் உறைகின்றனர். பிராகாரத்தை வலம் வரும்போது வலப்புறம் ராமதாச அனுமனின் சந்நதி உள்ளது. தன் இதயத்தில் சீதாராமரை தரிசனம் காட்டும் அனுமனின் சந்நதி இது.

சனிபகவானைத் தன் பாதங்களுக்கு அடியில் மிதித்த திருக்கோலத்தில் ஒரு அனுமன் காட்சி தருகிறார்.  அடுத்து பாதாள உலகில் வாழும் ஏழு தலை நாகத்தின் வாலை தன் இடது கரத்தால் தூக்கிக் கொண்டுள்ள நிலையில் உள்ள அனுமனை தரிசிக்கிறோம். வெளிப்பிராகாரத்தில் ஆழ்வார்களின் சந்நதியும், ருக்மாயி, பாண்டுரங்கன், தேவி கருமாரியம்மன், நவகிரகங்கள் போன்றோரும் அருள்கின்றனர். அடுத்து, காசியில் உள்ளது போலவே காசிவிஸ்வநாதர் சதுர அமைப்புள்ள பள்ளத்தில் அருள்கிறார். அவரது வாயிலின் இருபுறங்களிலும் பாலகணபதி, பாலமுருகனுடன் அன்னை விசாலாட்சி தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஆலயத்தினுள் ராமர், சீதை, லட்சுமணர், அனுமனுடன் உள்ள சந்நதி ஒன்றும் உள்ளது. விஷ்வக்சேனர், சுதர்சனமூர்த்திகளும் இந்த கருவறையில் அருள்கின்றனர். அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன், ஐயிரண்டு திருவுருவங்களில் அருளும் திருத்தலம் இது.

சனிபகவான் திருத்தலங்கள்

Related image

திருநெல்லிக்காவல் :

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.  

இடும்பாவனம் :

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.   

திருநறையூர் :

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய்  மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடிமரமும் பலிபீடமும் சனி பகவானுக்கு உண்டு. காக வாகனத்துடன் காட்சி தரும் இத்தலம் சிறந்த சனிபரிகாரத் தலமாக கூறப்படுகிறது. தசரதர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை இத்தல சனி பகவானை வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். தந்தை வழிபட்டதால் ராமச்சந்திரமூர்த்தியும் இத்தலம் வந்து சனி பகவானையும் ஈசனையும் வணங்கினார். அதனால் இத்தல ஈசன், ராமநாதசுவாமி ஆனார். 

வழுவூர் :

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். 

எட்டியத்தளி :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. 

அறையணி நல்லூர் :

திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார். 

ரத சப்தமி விரத வழிபாடு முறைகளும்... அதன் பலன்களும்

Image result for சூரிய தேவன்

ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். 

இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.

இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் விரதமிருந்து பூஜையை தொடங்க வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். 

அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

சாப்பிட்டால் பலனுண்டு


விரதம் என்றால், காலை முதல் மறுநாள் காலை வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த விதி சஷ்டி, கார்த்திகை, ஏகாதசி, பிரதோஷம் போன்ற அனைத்து விரதங்களுக்கும் பொருந்தும். ஆனால், பசி தாங்க முடியாதவர்கள், நோயாளிகள் விரதம் இருந்தால் சில உணவு வகையைச் சாப்பிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், கிழங்குவகைகள், நெய், பால், தெய்வத்திற்கு படைக்கப்பட்ட உணவு போன்றவற்றை விரதநாளில் அளவோடு சாப்பிடலாம். மகாபாரதம், உத்யோகபர்வம் ஸ்லோகம் ஒன்றில் இந்தத் தகவல் உள்ளது.

பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்


பாத்ரூமில் நுழைந்ததும் தன்னை மறந்து பாடுவது சிலரது இயல்பு. ஆனால், சாஸ்திரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.

எங்கு குளித்தாலும், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு புண்ணிய நதிகளையும் முதலில் வணங்க வேண்டும். அதற்குரிய ஸ்லோகமாக, ""கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!'' என்று சொல்ல வேண்டும். 

அதன் பின் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகமோ அல்லது மந்திரமோ சொல்லலாம். ஏதும் தெரியாதவர்கள் மவுனமாக நீராட வேண்டும். வீண்பேச்சோ, கண்ட பாட்டுகளையோ சத்தமிட்டுப் பாடக்கூடாது. இதனால், நீருக்கு அதிபதியான வருணன் கோபம் கொள்வதோடு, மேனியழகைக் குறையச் செய்து விடுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

சாட்சி சொல்லாத சத்தியசீலர்



"நெஞ்சாறப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு. 
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று'' என்று அழுத்தமாகச் சொல்வார் திருவள்ளுவர். 

பொய்யால் வரும் கேடுகளை ஞானநூல்கள் பல விதமாகக் கூறுகின்றன. அதே சமயம், பொய் சொல்ல மறுப்பதால் விளையும் நன்மைகளையும் விரிவாக சொல்கின்றன. நம்மால் அப்படி நடக்க முடியாவிட்டாலும் தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே!

வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஏழை அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். மனதால் கூட பிறருக்குத் தீங்கு நினைக்காத அவர், தினமும் ராமரை வழிபட்ட பின்பே சாப்பிடுவார். ஒருசமயம், கிராமத்தின் ஜமீன்தார் ராமானந்த ராய் என்பவர், அந்த அந்தணரை வீட்டுக்கு வரவழைத்தார். 

வந்தவரிடம், ""நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்,'' என்றார். "நானோ ஏழை. எப்படி என்னால் உங்களுக்கு உதவ முடியும்,'' என்றார். 

ஜமீன்தார் அவரிடம்,""நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்கள் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். நீங்கள் சொல்வதை அனைவரும் நம்புவார்கள். அதனால் தான் உங்களிடம் கேட்டேன்,'' என்று சொல்ல, அதைக் கேட்ட அந்தணர், "புரியவில்லை' என்பது போலப் பார்த்தார். 

ஜமீன்தார், ""எனக்கு எதிராக ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என் பக்கத்து சாட்சியாக ஒரு சின்ன பொய் மட்டும் சொல்ல வேண்டும்,'' என வேண்டினார். 

அதைக் கேட்ட அந்தணர் கொதித்துப் போனார். ""பொய்யில் சிறுபொய் என்ன? பெரிய பொய் என்ன? தீ என்றால் சுடத்தானே செய்யும்,'' என மறுத்தார். ஜமீன்தாருக்கும் கோபம் வந்துவிட்டது. 

""எனக்காக நீங்கள் பொய் சொல்லாவிட்டால், உங்கள் மீதும் பொய் வழக்கு தொடுப்பேன்'' என மிரட்டினார். 

பொய்சாட்சி சொல்ல மறுப்பதன் மூலம் தானும் தன் குடும்பமும் நின்று பிச்சையேற்கும் நிலை வந்தாலும் கூட கவலையில்லை என்ற மனஉறுதியுடன் அந்தணர் தன் நிலையில் தளராமல் உறுதியாக இருந்தார். 

தான் சொன்னபடியே, ஜமீன்தார் அந்தணர் மீது பொய் வழக்கு தொடுத்து அந்தணருக்கு கொடுமை செய்யத் தொடங்கினார். அந்தணரோ சிறிதும் கலங்கவில்லை. ஜமீன்தாரின் நிர்பந்தத்தால், அந்தணர் வழிபட்டு வந்த ராம விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிராமத்தை விட்டே வெளியேறி விட்டார். ஒரு சிறு பொய் கூட சொல்ல மாட்டேன் என்று மறுத்த அந்த உத்தமரின் பெயர் "க்ஷிதிராம்'. அந்த சத்தியசந்தரின் புதல்வர் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர். 

உண்மை என்று சொன்னாலே ராஜா அரிச்சந்திரன் தான், நம் நினைவுக்கு வருவார். அதுபுராண காலக்கதை. நாம் வாழும் இந்த கலிகாலத்திலும் உண்மையை உயிராக மதித்த உத்தமர்கள் இருக்கத் தான் செய்திருக்கிறார்கள்.

Tuesday, 26 December 2017

எமனுக்கே சவால்

Image result for murugan

தமிழ் தெய்வமான முருகனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் பழமொழிகள் பல உண்டு.

* சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை. 
* வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை.
* சிந்தை நொந்தவனுக்குக் கந்தனே துணை
* வழிக்குத் துணை வடிவேல்
* "கலிக்கும்(வறுமை) கிலிக்கும்(பயம்) கந்தனை எண்ணு
* கேளற்றவர்க்கு வேள்'(கேட்பாரற்றவனுக்கு கந்தனே துணை) 
* காக்க காக்க கனகவேல் காக்க இந்தப் பழமொழிகளின் அடிப்படையில் தான், நக்கீரர்,

"நாளென் செயும் வினை தான் என் செயும்? 
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடுங்கூற்று என் செயும்- குமரேசர்
இருதாளும் தப்பாமல் சார்வார் தமக்கே!

என நவக்கிரகங்கள், எமன், முன்வினை என எதனாலும் தன்னை நெருங்க முடியாது என சவால் விடுகிறார்.