Friday, 7 July 2017

ஏழைகளுக்கு உணவளித்தல் 5 தலைமுறைக்குப் புண்ணியமாம்

தொடர்புடைய படம்

தானங்கள் எத்தனைத் தலைமுறைக்கு புண்ணியம்!

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தவன். தானத்தின் அடையாளம் கர்ணன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு உணர்த்தியவர்.

தானம் செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த வாய்ப்பு!

உயிரோடு இருக்கும் போது ரத்த தானம், இறந்தபின் கண் தானம், இறந்தும் இறவாமலிருக்க உடல் உறுப்புகள் தானம் செய்யலாம். தானங்கள் செய்வதற்கு ஏற்றவாறு நம்முடைய உடலை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். மனதையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்தத் தானங்கள் செய்வது அவரவர் விருப்பம். அவரவர் மனதைப் பொறுத்தது.

எவ்வகை தானங்கள் எத்தனைத் தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்

எந்த மனிதனும் தான் இன்பமாய், மகிழ்ச்சியாய் வாழுங்காலத்திலேயே தனக்கான தான தருமங்களைச் செய்து கொள்வது நல்லது. எந்தெந்த செயல்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், பாவம் சேரும் என்பதைப் பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும் முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விடப் புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர். அரசர் காலங்களில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக காணலாம். அந்த வகையில் ஒருவர் எந்தெந்த தானம் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்குப் புண்ணியம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

* அன்ன தானம் - 3 தலைமுறைக்கு புண்ணியம்.

* திருக்கோயிலில் தீபம் ஏற்றினால் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.

* பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்குப் புண்ணியம்.

* ஏழைப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தல் - 5 தலைமுறைக்கு புண்ணியம்.

* பித்ருக்களுக்கு உதவி செய்தல் - 6 தலைமுறைக்கு புண்ணியம்.

* அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிமகிரியை செய்தல்- 9 தலைமுறைக்கு புண்ணியம்.

* முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் - 21 தலைமுறைக்கு புண்ணியம்.

* பசுவின் உயிரைக் காப்பது - 14 தலைமுறைக்கு புண்ணியம்.

இவ்வாறு நாம் வாழும் காலத்திலேயே தானம் செய்து புண்ணியத்தை சேர்த்துக்கொண்டால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் சீறும் சிறப்புமாக வாழ்வர்.

No comments:

Post a Comment