Thursday, 6 July 2017

பண்டாரம் என்றால் என்ன தெரியுமா ?

கோவில் கருவூலம் க்கான பட முடிவு

கோயில் நகைகளை பத்திரமாக வைத்திருக்கும் கருவூலம் தான் பண்டாரம் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு கோயிலிலும் பண்டராம் இருந்தது. கோயிலுக்கு தானமாக அளிக்கபடுகின்ற காசுகள், அணிகலன்கள் போன்றவை இந்த கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். பேரூர் கல்வெட்டு ஒன்றில் பண்டாரம் அழிக்கப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட இழப்பினை சரிகட்ட வேண்டும் என சிவனடியார்கள் அரசனிடம் முறையிடுவதாகவும், அதற்கு அரசன் ஒரு ஊரையே தானம் அழித்ததாகவும் கூறப்படுகிறது. சோழர் காலத்தில் கருவூலங்கள் ஒரு வங்கி போல செயல்பட்டு வந்தன. தானங்கள் மூலம் கோயிலுக்கு கிடைத்த தொகையினை தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் வருகின்ற வட்டி பணத்தை கொண்டு தான தர்மம் செய்து வந்தனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலிலும் பண்டாரம் இருந்துள்ளது. இதில் கழஞ்சு, அச்சு, வராகன் உள்ளிட்ட அணிகலன்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

பண்டாரத்தில் இருந்தே கோயில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் ஊரில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பண்டாரத்தில் இருந்து காசு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை தேவகன்மிகள் மற்றும் மன்றாடியார்கள் இணைந்து நிர்வகித்து வந்துள்ளனர். கோயில் நிர்வாகம் ஆயிரமாண்டு வரலாற்றுகளை தன்னகத்தே கொண்டது. பஞ்சகாலங்களில் கோயிலானது மக்களை பசிபட்டியினியில் இருந்து பாதுகாத்தது. பஞ்சகாலத்தின் போது கோயில் நகைகளை விற்று உண்டு வாழ்ந்தனர். மழைவளம் பெற்ற பேபாது அணிகலன்களை வாங்கி இறைவனுக்கு பூட்டி மகிழ்ந்து அழகு பார்த்தனர். இதுகோயிலுக்கும் மக்களுக்கும் இடையே நிலைப் பெற்றிருந்த பிணைப்பினை காட்டுகிறது. ஆடு, மாடு மேய்க்கும் ஊரைபள்ளி என அழைப்பர். அன்னூர் அருகே உள்ள மேய்ச்சல் நிலங்களாக இருந்த ஊர்கள் விண்ணம்பள்ளி, பதுமம்பள்ளி, வயிரம்பள்ளி, கஞ்சப்பள்ளி, தடப்பள்ளி, புதுப்பள்ளி, வடக்கிற்பள்ளி, தென்பள்ளி. பள்ளி, பாடிஅடை மொழியுடன் கூடிய ஊர்கள் கால்நடை மேய்ப்பவர்கள் தங்கியிருந்த ஊர்கள். 

No comments:

Post a Comment