ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.
பொதுப் பொருள்:
தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ. தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும். பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி! என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment