அசோகவனத்தில் சீதையைக்கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்தார் அனுமன். இதனால் மகிழ்ந்த சீதா, அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். 'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றியை காரணமாக்கி ஆசிர்வதித்ததால், இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது. திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது அனைவரது ஆசிர்வாதத்துடன் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.
Tuesday, 11 July 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment