அனுமன் வழிபாடு ருண ரோகங்களை நிவர்த்தி செய்யும். ராமர்-சீதைக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் அனுமன். எனவே, தம்பதியர்களின் பிரச்சினைகள் தீரவும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர், சனி திசை, சனி புத்தி நடப்பவர்கள், ஏழரைசனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி, விரயச் சனி, ஜென்ம சனி போன்ற சனி ஆதிக்கங்கள் ஜாதகத்தில் நடந்தால் அனுமன் பிறந்த மூல நட்சத்திரமன்று ஆலயத்திற்கு சென்று ஆஞ்ச நேயரை வழிபடுவது சிறப்பு. அப்படிச் செய்தால் தடைகளும், தாமதங்களும் விலகும். மணியை வாலில் கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டால் பணியிலிருந்த தொய்வு அகலும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதன் வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் வாழ்வில் காரிய வெற்றி ஏற்படும்.
Thursday, 13 July 2017
அனுமன் வாலில் பொட்டு வைத்தால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment