த்வயா ஹ்ருத்வா வாமம் வபு ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் தவத்ரூபம் ஸகல மருணாபம் த்ரிநயனம்
குசாப்யா மாரம்ரம் குடில சசி சூடால மகுடம்
ஆதிசங்கரரின் ஸௌந்தர்யலஹரி (23வது பாடல்)
பொதுப் பொருள்:
பிரிக்கவொண்ணாத சிவமும் சக்தியுமான அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபியே நமஸ்காரம். சிவன் வெள்ளை நிறத்துடனும், சக்தி சிவப்பு நிறத்துடனும் ஒன்றியிருக்கிறார்கள். ஆனால் இதில், தேவியின் உருவம் முற்றிலும் சிவப்பு நிறமாகவே காணப்படுகிறது. அதோடு, அவள் முக்கண்களைக் கொண்டவளாகவும், தன்னுடைய கிரீடத்தில் சந்திரப் பிரபையை உடையவளாகவும், காட்சி தருவது, சிவமே முழுவதுமாக சக்தியாகிவிட்டதோ என்றே கருத வைக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த சக்தியே நமஸ்காரம்.
(இத்துதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபித்து வந்தால் வாழ்வில் சகல வளங்களும் பெற்று கடன் தொல்லைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.)
No comments:
Post a Comment