ஏழுமலையான் தான் உலகிலேயே பெரிய பணக்கார சுவாமியாக உள்ளார். ஆனாலும் அவர் மண் பாத்திரத்தில் சாப்பிடுகிறார். காரணம் தெரியுமா? பீமன் என்னும் மண்பாண்ட தொழிலாளி, தினமும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண்ணால் பூக்கள் செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த பெருமாள், மன்னர் தொண்டைமான் கனவில் தோன்றி, “மன்னா! நீ அளிக்கும் பொன் மலரை விட பீமன் தரும் மண்மலர் மீது எனக்கு விருப்பம் அதிகம்” என்றார். இதையடுத்து தொண்டைமான், பீமனுக்கு பொருளுதவி செய்தார். பீமனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இன்றும் ஏழுமலையானுக்கு தயாராகும் நைவேத்யங்கள் மண்பாண்டங்களில் வைக்கப்படுகிறது.
Monday, 12 February 2018
மலையப்பன் சாப்பிட மண்சட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment