
தர்மபுரியில் உள்ள அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது, பைரவர் திருக்கோவில். இங்கு கருவறையில் வீற்றிருக்கும் பைரவரின் திருமேனியில் நவக்கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் இந்தக் கோவிலின் மகா மண்டபம், நவக்கிரகங் களைக் கூரையாக வைத்து அமைக்கப் பட்டுள்ளது. எனவே கருவறைக்குள் செல்பவர்கள், குறுக்காகச் சென்று விடாமல் ஒன்பது கூரைகளின் கீழ் வரிசையாகச் சென்று, கருவறையில் உள்ள மூலவரை தரிசனம் செய்து வர வேண்டும்.
No comments:
Post a Comment