Monday, 10 July 2017

ஆடியில் புதுமண தம்பதியரை பிரிப்பது ஏன் ?

புதுமண தம்பதி க்கான பட முடிவு

பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை மேலோங்குகிறது. வரன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள், வாழ்க்கையில் எவ்வளவோ அலைச்சலைச் சந்திக்கிறார்கள். பிறகு நல்ல நாள் பார்த்து தம்பதியரை ஜோடி சேர்த்து வைக்கிறார்கள். ஆனி 31-ந் தேதி ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, மறு நாள் வரும் ஆடி மாதத்தில் சேர்த்து வைத்த தம்பதியர்களைப் பிரித்து வைத்து விடுகிறார்கள்.

காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கை கூடாது என்றும், ஆடியில் தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பதால் பெண்களை தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். அதையும் மீறி சித்திரையில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சொல்வார்கள். இருப்பினும் அங்காரகனுக்கும், ஆதவனுக்கும் யோகபலம் பெற்ற நாளில் பரிகாரங்கள் செய்தால், பெற்றோர்களுக்கு தோஷங்கள் விலகி யோகங்கள் வந்து சேரும். பிள்ளைகளாலும் எந்த தொல்லையும் ஏற்படாது.

No comments:

Post a Comment