தாயைப் போல பிள்ளை என்பார்கள். பழநி முருகனோ, தந்தையைப் போல சிவஅம்சத்துடன் பழநியில் வீற்றிருக்கிறார். சிவ அம்சம் கொண்ட இவர் அபிஷேகப்பிரியனாக விளங்குகிறார். நவபாஷாணம் என்னும் ஒன்பது மூலிகையால் ஆன இவரது திருமேனியில் பட்ட பஞ்சாமிர்தம் நோய் போக்கும் சக்தி படைத்ததாகும். இவரை மொட்டையாண்டி என்று சொன்னாலும், சிவனைப் போலவே சடையாண்டியாக இருக்கிறார். இதை, "முடி மிசை ஒண்மீக் குடுமியழகு' என்று தலபுராணத்தில் குறிப்பிட்டுள்ளனர். பழநி முருகன் மொட்டையடித்திருந்தாலும், தலையின் பின்னால் சிறு குடுமி மட்டும் உள்ளது.
Sunday, 17 December 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment