11-ந்தேதி (செவ்வாய்) :
* தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
12-ந்தேதி (புதன்) :
* முகூர்த்த நாள்.
* திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் ரத உற்சவம்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம், இரவு புஷ்பக விமானத்தில் ராம அவதாரக் காட்சி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் வீதி உலா, சந்தனக் காப்பு, இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
13-ந்தேதி (வியாழன்) :
* விநாயகர் சதுர்த்தி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் * பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.
14-ந்தேதி (வெள்ளி) :
* ரிஷி பஞ்சமி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்தன பிரபையில் பவனி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், ருக்மணி-சத்யபாமா சமேத கிருஷ்ணன் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
15-ந்தேதி (சனி) :
* சஷ்டி விரதம்.
* திருக்குறுக்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் வீதி உலா, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரக் காட்சி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க சேவை.
* சமநோக்கு நாள்.
16-ந்தேதி (ஞாயிறு) :
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் பவனி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
17-ந்தேதி (திங்கள்) :
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு மகர கண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.
* திருவகிந்திரபுரம் வேதாந்த தேசிகர் வெண்ணெய் தாழி சேவை.
* சமநோக்கு நாள்.
No comments:
Post a Comment