Wednesday 12 September 2018

தந்தையைப் போல் பிள்ளை

தந்தையைப் போல் பிள்ளை

‘தாயைப் போல பிள்ளை’ என்பது தான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்.

சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்.

சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல, ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் உண்டு.

இருவருக்கும் மூன்று கண்கள் உள்ளன.

தலையில் இருவரும் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள்.

இருவரும் நாகத்தை ஆபரணமாக கொண்டவர்கள்.

தந்தையைப் போல விநாயகரும் ஐந்தொழில்களைச் செய்பவர்.

நடராஜராக நடனக் கோலத்தில் அருளும் ஈசனைப் போலவே, விநாயகரும் ‘நர்த்தன கணபதியாக’ அருள்பவர்.

பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், ‘வல்லப கணபதி’யாக அம்பாளின் இடப் பாகத்தில் அமர்ந்திருப்பார். 

No comments:

Post a Comment