ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறக்கும் போது, வான மண்டலத்தில் அப்போது காணப்படும் கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும், கிரகங்களின் அதிர்வலைகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுவதால் உண்டாகும் எதிர்மறை அதிர்வலைகளைப் பொருத்தும் அக்கிரகங்களினால் பாதிப்பை அடைகின்றன. அதனால் அவை அவ்வுயிருக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்து விடுகிறது.
இவற்றையே ஜோதிடத்தில் கிரக தோஷங்கள் என்கிறோம். அதுவும் நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய இருவருக்கும் இடையில் மற்ற கிரகங்கள் சிறைப்பட்டிருக்கும் அமைப்பை கால சர்ப்ப தோஷம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஸ்ரீகருடனை ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும், சிறப்பாக ஆவணி சுவாதிலும் வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் நிச்சயம் நீங்கும்.
No comments:
Post a Comment