மதுரையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் அழகர்கோவில் உள்ளது. அங்கிருந்து பெருமாள் பல ஊர்களில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளுகிறார். வீட்டுக்கு வரும் விருந்தினரை வாசலுக்கு வந்து வரவேற்பதும், வழியனுப்புவதும் மரபு. அதுபோல, கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு "எதிர்சேவை' என்று பெயர். செம்பில் சர்க்கரை அல்லது இனிப்பு பண்டம் இட்டு, அதன்மேல் சூடம் ஏற்றி "கோவிந்தா! கோவிந்தா!' என்று சொல்லி வணங்குவர். மதுரையை விட்டு அழகர்மலைக்கு பூப்பல்லக்கில் திரும்பும்போதும், இதே வழிபாட்டை செய்கின்றனர். "சேவை' என்பது "சேவித்தல்' என்ற சொல்லில் இருந்து வந்தது. "சேவித்தல்' என்றால் "வணங்குதல்' என்று பொருள்.
Sunday, 24 September 2017
எதிர்சேவை என்றால் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment