விநாயகர் ஜாதகம்,
விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் உள்ளார். செவ்வாய் சூரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்திராடத்திற்கு இவர் அதிதேவதையாகத் திகழ்கிறார். இவரது ஜாதகத்தை வழிபட்டால் இந்த நட்சத்திரத்தினர் பலன் பெறுவர் என்பது ஐதீகம்.
யுகங்களில் தோன்றும் கணபதிகள்,
விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றினார். த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றினார். துவாபர பாகத்தில் கஜனை ராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றினார். கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.
உ
‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம். முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது. ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.
வலது கையில் ஸ்வஸ்திக்குறி காணப்படுவது ஏன்?
ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது. ஆன்மாவானது ஞானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களைத் கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.
யானைத்தலை விளக்கம்,
தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு. அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத் தலை. யானைத் தலை யானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வு கிட்டும்.
No comments:
Post a Comment