Thursday, 1 March 2018

பதில் தந்த பரமசிவம்



திருவண்ணாமலையில் ரமணர் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் அவரை காண வந்தார். அப்போது ரமணரின் வயது 20. ''சுவாமி! துறவிகளான நீங்கள் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது. தீட்சை பெற்று காவியுடை அணிவது நல்லது. விரும்பினால் தீட்சை பெறுவதற்குரிய, ஏற்பாட்டை செய்யட்டுமா?'' என பக்தர் கேட்டார். 

இது பற்றி ஏதும் சிந்திக்காத ரமணர் மவுனம் காத்தார். அப்போது அங்கு புத்தக மூடையுடன் முதியவர் ஒருவர் வந்தார். ரமணரிடம் மூடையை கொடுத்து விட்டு, திரும்பி வரும் போது பெற்று செல்வதாக கூறி புறப்பட்டார். அதில் 'அருணாசல மகாத்மியம்' என்னும் புத்தகம் இருப்பது கண்ட ரமணர் அதை சப்தமாக படித்தார். அதில் ரமணருக்கு, சிவன் பதில் தருவது போல ஸ்லோகம் ஒன்றிருந்தது.

''திருவண்ணாமலையில் வாழ்பவர் யாராக இருந்தாலும் தீட்சை பெறாமலேயே சிவனருளால் நற்கதி பெற முடியும்'' என குறிப்பிட்டிருந்தது. ரமணரிடம், மன்னிக்குமாறு பக்தர் கேட்டுக் கொண்டார். 

மங்களகரமாக தொடங்கிய மார்ச் மாதத்தில் என்னென்ன விசேஷசங்கள்..

snanam

பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை என இந்த மார்ச் மாதம் முதல் நாளே மங்களகரமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நிகழ உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம். 


01 மார்ச் 2018    மாசி - 17    பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை, கரிநாள்    

02 மார்ச் 2018    மாசி - 18    ஸமுத்ர ஸ்நானம்       

04 மார்ச் 2018    மாசி - 20    திருவள்ளுவர், எறிபத்தர் குருபூஜை       

05 மார்ச் 2018    மாசி - 21    க்ருஷ்ணபக்ஷ சங்கடஹர சதுர்த்தி       

06 மார்ச் 2018    மாசி - 22    வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை )       

07 மார்ச் 2018    மாசி - 23    க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி       

11 மார்ச் 2018    மாசி - 27    காரியர் குருபூஜை       

13 மார்ச் 2018    மாசி - 29    க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி       

14 மார்ச் 2018    மாசி - 30    க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம், ச்ரவண விரதம், காரடையார் நோன்பு (இரவு 9.30 - 10.30)       

15 மார்ச் 2018    பங்குனி - 1    மாஸ சிவராத்ரி       

17 மார்ச் 2018    பங்குனி - 3    ஸர்வ அமாவாஸ்யை       

18 மார்ச் 2018    பங்குனி - 4    தெலுங்கு வருஷப்பிறப்பு, யுகாதி, வஸந்த நவராத்ரி ஆரம்பம்       

19 மார்ச் 2018    பங்குனி - 5    சந்திர தரிசனம்       

20 மார்ச் 2018    பங்குனி - 6    சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள்       

21 மார்ச் 2018    பங்குனி - 7    க்ருத்திகை (இரவு 7.32 முதல்), சதுர்த்தி விரதம்       

22 மார்ச் 2018    பங்குனி - 8    சுக்லபக்ஷ ஷஷ்டி, கிருத்திகை (மாலை 6.24 வரை)       

23 மார்ச் 2018    பங்குனி - 9    ஷஷ்டி விரதம், நேசனார் குருபூஜை       

25 மார்ச் 2018    பங்குனி - 11    ஸ்ரீராம நவமி, கணநாதர் குருபூஜை       

27 மார்ச் 2018    பங்குனி - 13 சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி, முனையடுவர் குருபூஜை       

29 மார்ச் 2018    பங்குனி - 15    சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், மஹாவீர் ஜயந்தி, கரிநாள்       

30 மார்ச் 2018    பங்குனி - 16    பௌர்ணமி, பங்குனி உத்ரம்

கிரிவலம் தெரியும்; நதிவலம் தெரியுமா....


பவுர்ணமியன்று மலையை சுற்றி வருவது பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 'பரிக்ரமா' என்னும் பெயரில் நர்மதை நதியை சுற்றும் வழக்கம் இருப்பது தெரியுமா? 

1290 கி.மீ., நீளமுள்ள நர்மதை நதி, மத்திய பிரதேசத்தில் அமர்கண்ட் என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. புனித நதியான இது, சிவனின் உடம்பில் இருந்து தோன்றியதால் 'ஜடா சங்கரி', 'ருத்ர கன்யா' என அழைக்கப்படுகிறது. 

இந்நதியை முதன் முதலில் சுற்றி வந்தவர் மார்க்கண்டேய மகரிஷி. அஸ்வத்தாமா, பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகிய சிரஞ்சீவிகள் ஏழுபேரும் சுற்றி வருவோரை பாதுகாப்பதாக ஐதீகம். தங்களின் விருப்பம் நிறைவேற பக்தர்கள், 3 ஆண்டில், 2600 கி.மீ., தூரத்தை சுற்றி வந்ததாக புராணம் சொல்கிறது. தற்போது ஒரு வாரத்திற்குள் நர்மதையை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பொக்கிஷத்தில் இரு ரத்தினங்கள்


அனுமன் என்னும் பக்த ரத்தினம், சுந்தர காண்டம் என்னும் மந்திரரத்தினம் ஆகிய இரு ரத்தினங்களை ராமாயணம் என்னும் பொக்கிஷம் நமக்கு அளித்துள்ளது. பக்தர்களில் சிறந்தவர் அனுமன். கணப்பொழுதும் ராம நாமத்தை மறவாதவர் அவர். ராமரின் அருளை விரைவில் அடைய விரும்புவோர் ஒருமுறை 'ஸ்ரீராமஜெயம்' என்று சொல்லி அனுமனை சரணடைந்தால் போதும். இதனால் அவர் 'பக்த ரத்தினம்' என போற்றப்படுகிறார். 

வாழ்வில் எத்தகைய துன்பம், கவலை, தடைகள் குறுக்கிட்டாலும் சுந்தர காண்டத்தை படித்தால் சூரியனைக் கண்ட பனி போல பறந்தோடும். அனுமனின் அருள் பெற 'சுந்தரகாண்டம்' படிப்பதே சிறந்த வழி.

இரு மனம் இணைந்தது எப்படி?


திருமண சடங்கில் மணமகளின் காலை, மணமகன் பற்றிக் கொள்ள, பெண் காலால் ஏழு அடிகளை எடுத்து வைப்பாள். அப்போது 'சப்தபதி' என்னும் மந்திரம் சொல்லப்படும். 'சப்தம்' என்றால் 'ஏழு'. அந்த மந்திரத்தின் இறுதியில் ''ஏழு அடிகளை கடந்த நீ என்றும் என் தோழியாக இருக்க வேண்டும். நாம் என்றென்றும் இனிய நண்பர்களாக வாழ்வோம். நல்ல மழலை செல்வமும், செல்வ வளமும் பெறுவதற்காக நீ என்னோடு வருவாயாக' என்னும் பொருளில் மந்திரம் இடம்பெறும். இதற்கு 'சகா மந்திரம்' என்றும் பெயருண்டு. 'சகா' என்றால் 'உறவு' அல்லது 'நட்பு'. இல்லற வாழ்வில் ஈடுபடும் இரு மனங்களை இணைத்திடும் மந்திரம் இது.

துவாரகாமாயி என்று பெயர் சூட்டிய பாபா

துவாரகாமாயி என்று பெயர் சூட்டிய பாபா

பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம். பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்.

சீரடி சாயி பாபா இரண்டாவது முறையாக இளைஞனாக சீரடி வந்தபோது மகல்சாபதிதான் அவரை வரவேற்றார். அவ்வூர் மக்களுக்கு அவர் ஒரு மஹான் என்பதோ பெரும் ஞானி என்பதோ சத்குரு என்பதோ தெரியவில்லை. ஆகவே அவர் தங்க இடம் கேட்டபோது அவரை சிதிலம் அடைந்த மசூதிக்கு அனுப்பினார்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள். ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்துச் சாப்பிட்டார். கிழிந்து போன உடை, இடிந்து பாழாய்ப் போன ஒரு மசூதி. இவற்றுக்காக ஏதும் முணுமுணுத்தாரா? அவருக்கு எல்லாம் சமம்தானே! நாளாவட்டத்தில் அந்த மசூதி கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தப்பட்டது. பாபாவும் அதற்கு துவாரகாமாயி எனப் பெயர் சூட்டினார். பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம். 

அங்கே அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படும். கவலை ஓடிவிடும். கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வரும். எனவேதான் பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அது திறந்த வெளி தர்பார். ஒளிவு மறைவு என்று ஏதுமில்லை, கெடுபிடியில்லை, எல்லோரும் வரலாம், எளிதாக தரிசனம் பெறலாம். 

ராஜயோக வாழ்வு தருபவர்


தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் அருள்பாலிக்கிறார். பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். திட்டை என்றால் 'மேடு'. இங்குள்ள உலகாம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் குருபகவானுக்கு சன்னதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் 'ராஜகுரு' எனப்படுகிறார். கிரகங்களில் குருபகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தரும் தனகாரகராக விளங்குகிறார். எனவே தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.