கீழே உள்ள துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
குண்டலம் தீப்திராஜத்
கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
ஸபீதாம்பரம் ச
நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
விஸ்வவந்த்யம் முகுந்தம்.’
பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம்.