23-ந்தேதி (செவ்வாய்) :
* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (புதன்) :
* பவுர்ணமி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம், காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அன்னாபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (வியாழன்) :
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்பாள் வீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
26-ந்தேதி (வெள்ளி) :
* கார்த்திகை விரதம்.
* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
* திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
27-ந்தேதி (சனி) :
* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
28-ந்தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் இந்திர விமானத்தில் பவனி வருதல்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
29-ந்தேதி (திங்கள்) :
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன், உடையவர் உடன் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
No comments:
Post a Comment