14-ந்தேதி (செவ்வாய்) :
நாக சதுர்த்தி.
சதுர்த்தி விரதம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், வெள்ளி கமலத்தில் தவழ்ந்த கோலத்துடன் தபசு மண்டபம் எழுந்தருளல்.
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் வசந்த உற்சவம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா.
திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் தபசுக் காட்சி.
மேல்நோக்கு நாள்.
15-ந்தேதி (புதன்) :
சுதந்திர தினம்.
கருட பஞ்சமி.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம், கருங்குருவிக்கு உபதேசித்து அருளிய லீலை, கற்பக விருட்சத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.
நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் மின்விளக்கு தீப அலங்காரத்தில் திருமண கோலத்துடன் பவனி.
சமநோக்கு நாள்.
16-ந்தேதி (வியாழன்) :
சஷ்டி விரதம்.
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாரைக்கு மோட்சம் அளித்தல், பூத அன்ன வாகனத்தில் பவனி.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் ஊஞ்சல் சேவை.
விருதுநகர் சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
சமநோக்கு நாள்.
17-ந்தேதி (வெள்ளி) :
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், கயிலாசம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு.
சமநோக்கு நாள்.
18-ந்தேதி (சனி) :
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளல், தங்க சப்பரத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி- அம்பாள் வீதி உலா.
ராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா, இரவு இருவரும் ஏக சிம்மாசனத்தில் பவனி.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (ஞாயிறு) :
மதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் புறப்பாடு.
ராமேஸ்வரம் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
சமநோக்கு நாள்.
20-ந்தேதி (திங்கள்) :
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.
ராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி.
விருதுநகர் சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
சமநோக்கு நாள்.
No comments:
Post a Comment