கருடனின் திருவுருவம் வேதமே வடிவானது. அவருடைய சிறகுகளில் ரிக், யஜுர், சாம வேதங்கள் அடக்கம். அவருடைய ஞானம், சக்தி, பெருமை என்னும் குணங்களை அறிந்தவர்கள் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்னும் குணங்களுக்கு இருப்பிடமான சம்சாரக்கடலை கடந்து மோட்ச மடைவார்கள்.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பலன்களை நாடுபவர்கள், கருடனின் உதவியைக் கொண்டு எம்பெருமான் எங்கும் செல்வதுபோல் கருடனின் அருளால் அடைவர். இவர் திருப்பாற்கடல், சூரிய மண்டலம், யோகிகளின் உள்ளம் என்னும் மூன்று இடங்களில் வாசம் செய்யும் எம்பெருமானுக்கு வாகனமாக விளங்குகின்றார்.
ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் அகிய ஆறு குணங்களுக்கும் உறைவிடமானவர். பற்பல மக்களை பல்வேறு சமயங்களில் காப்பவர்.பால்யம், யௌவனம், கௌமாரம் என்னும் மூன்று நிலைகளை மட்டுமே உடைய தேவர்களின் பகைவரான அசுரர் கூட்டத்தை மயக்கித் தம் நிலைகுலையுமாறு செய்பவர். இந்தக் கருடன் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நமக்கு நேரும் பெரிய பாவத்திலிருந்து நம்மை காக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment