Tuesday 28 August 2018

வாராகி மாலை அற்புதம் நைவேத்தியம் விளக்கங்கள்

வாராகி மாலை அற்புதம் நைவேத்தியம் விளக்கங்கள்

என் வாராகி பக்த கோடிகளே நான் இரு வாரங்களாக வாராகி மாலை விளக்கங்கள் கொடுத்து வந்தேன். அன்னையின் மாலை கேட்டு கண்ணீர் மல்க என் அன்னையின் மகத்துவத்தை அறிந்து மகிழ்ந்து கூறிய உங்கள் மனதையும் பொற்பாதங்களையும் வணங்கி மகிழ நான் கடமைபட்டுள்ளேன். இவ்வாரம் வாராகி மாலை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம், மேலும் வாராகி மாலையில் இன்னும் 6 பாடல்கள் உள்ளது. அதை பாடலாக மட்டும் கொடுத்துவிடுகிறேன். எல்லா பாடல்களுமே அன்னை நம்மை காக்கும் கவசமாக நிற்கும் அற்புத பாடல்களே. அதை மட்டும்கொடுத்து அதன் அற்புதங்களை விளக்குகின்றேன். 

25. ‘‘சிந்தை தெளிந்து வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் 
நிந்தனை பண்ணி மதியாத உலத்தர் நிணம் அருந்தி
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற்பொற் கொடியே...’’

26. ‘‘பொருப்புக்கு மாறுசெய் பாழியும் தோளும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது
இருப்புக் கடிய மனதில் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக்குவால் என கொல்வாய் வாராஹி என் நிர்குணியே’’

விளக்கம்:-
இப்பாடலை மனம் ஒருநிலைபடுத்த பாடினால் மனம் தெளிந்து ஒற்றுமைபடும். முயற்சித்து அருள் பெருக. 

27. ‘‘தேறிட்ட நின்மலர்ப்பாத அரவிந்தத்தை சிந்தை செய்து 
நீறு இட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
மாறிட்டவர் தமை வாளாயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட்டு எறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.’’

28. ‘‘நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமாள்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே 
சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே’’

29. ‘‘வீற்றிருப்பாள் நவகோணத்திலே, நம்மை வேண்டுமென்று
காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம்.
பார்த்திருப்பாள் அல்லல் எங்கே என்று அங்கு சபாசம் கையில் 
கோர்த்திருப்பாள், இவளே என்னை ஆளும் குலதெய்வமே’’

30. சிவஞான போதகி செங்கைப் கபாலி, திகம்பரி நல்
தவமாகும் மெய்அன்பர்கே இடர்சூடும் தரியலரை 
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி, இங்கு நலமாய் வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே...

No comments:

Post a Comment