Tuesday, 21 August 2018

இந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை

இந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை

21-ந்தேதி (செவ்வாய்) :

* திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம், தங்கப் பல்லக்கில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (புதன்) :

* பக்ரீத் பண்டிகை.
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முக உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக் குதிரையில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரைக்கு எழுந்தருளல்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை, சுவாமி அம்பாள் விருசபாரூட தரிசனம்.
* விருதுநகர் சொக்கநாதர் கோவில் ரத உற்சவம், இரவு ஏகாந்த சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி வேங்கடமுடையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (வெள்ளி) :

* வரலட்சுமி விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வி றகு விற்ற திருவிளையாடல், சுவாமி - அம்பாள் தங்க சப்பரத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* விருதுநகர் சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

25-ந்தேதி (சனி) :

* ஓணம் பண்டிகை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத் தேரில் பவனி, இரவு சப்தாவரணம்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ரத உற்சவம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் திருபவித்திர உற்சவம் தொடக்கம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜர் திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (ஞாயிறு) :

* பவுர்ணமி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விருசபாரூட தரிசனம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* வரகூர் உறியடி உற்சவம் தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள். 

No comments:

Post a Comment