நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய ஸூஷ்கோதர பயானக
பொதுப்பொருள்: கருப்பு நிறமுடையவரும், சில நேரங்களில் நீல நிறமாய் ஒளிர்பவரும், மயில் கழுத்தின் நிறத்தைக் கொண்டவருமான சனிபகவானே நமஸ்காரம். கறுத்த காந்தியுள்ளவரே, நீலோத்பல புஷ்பம் போன்றவரே, நமஸ்காரம். மெல்லிய தேகமுடையவரே, நீண்ட காது, ஜடை கொண்டவரே, நமஸ்காரம். குறுகிய வயிறுள்ளவரும் பயங்கரமான வடிவுள்ளவரும் நீண்ட கண்களையுடைய சனிபகவானே நமஸ்காரம்.
No comments:
Post a Comment