மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சென்னை புற நகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை பாபா ஆலயம். நெடுந்தூரம் பயணம் செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளின் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் துணை புரிவதால், இந்த ஆலயத்தில் உள்ள சாயிபாபா ‘வழித்துணை சாயிபாபா’ என்று அழைக்கப்படுகிறார்.
‘என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ என்றவர் சீரடி சாயிபாபா. அந்தக் கூற்றின்படி இந்த ஆலயத்தின் வழித்துணை சாயிபாபா உயிர்ப்புடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு கூட்டு பிரார்த்தனை கோபுரம் அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் தங்களது குறைகளை வரி வடிவத்தில் கடிதமாக, பிரார்த்தனை படிவமாக எழுதி பாபாவின் பிரார்த்தனை பெட்டியில் போட்டால், அது பாபாவால் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் எலுமிச்சை பழத்தை பாபாவின் பாதங்களில் வைத்து பிரார்த்தித்து வந்தால், அதன் மூலம் குழந்தை வரமும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரமும் கிடைக்கும் என் கிறார்கள். அப்படி தங்களின் பிரார்த்தனை நிறைவேறி மகப்பேறு பெற்ற தம்பதியர், குழந்தையோடு இங்கு வந்து பாபாவின் பாதங்களில் குழந்தையை வைத்து ஆசிபெற்றுச் செல் கிறார்கள். தம்பதியினர் இடையே ஒற்றுமை இன்மை, கடன் பிரச்சினை, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், காரியத் தடைகள் அனைத்துக்கும் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் வழி கிடைக்கும்.
இங்கு இந்துக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு, பிரதி மாத பவுர்ணமி தினத்தில் சத்திய நாராயண பூஜையும், பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி, மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளான ரமலான், பக்ரீத் பண்டிகை நாட்களிலும் பாபாவிற்கு லுங்கியும் ஜிப்பாவும் அணிவித்து அழகுபார்பதோடு தினமும் திருக்குரானையும், பைபிளையும், சாயி சத் சரித்திரத்தையும் படித்து வருகிறார்கள்.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள இரணியம்மன் கோவிலுக்கு அருகிலேயே இந்த ஆலயம் இருக்கிறது.
No comments:
Post a Comment