28-ந்தேதி (செவ்வாய்) :
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (புதன்) :
* முகூர்த்த நாள்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (வியாழன்) :
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (வெள்ளி) :
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் பவனி வருதல்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (சனி) :
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (ஞாயிறு) :
* கிருஷ்ண ஜெயந்தி.
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துகிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (திங்கள்) :
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குட வருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியருளல்.
* வரகூர் உறியடி உற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
No comments:
Post a Comment