அம்மனுக்கு வழிபாட்டின் முதல் உபசாரமாக அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகை அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு பலன் நிச்சயம் உண்டு.
1. நீர் - அமைதி உண்டாகும்.
2. வாசனைப் பொருட்கள் - மல நிவாரணம்.
3. வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி.
4. சந்தனம் - செல்வம் பெருகும்.
5. சந்தனாதிதைலம் - சுகம் உண்டாகும்.
6. பால் - ஆயுள் விருத்தி
7. தயிர் - மக்கட்செல்வம் உண்டாகும்.
8. நெய் - மோட்சம் கிட்டும்.
9. தேன் - சங்கீத ஞானம் வளர்க்கும்.
10. கரும்புச் சாறு - என்றும் சுகம்
11. சர்க்கரை - பகை அறிவு
12. வாழைப்பழம் - பயிர் விருத்தி
13. பலாப்பழம் - உலக வசியம்.
14. மாம்பழம் - சகல விஜயம்.
15. தம்பரத்தான் பழம் - பூமி லாபம்.
16. மாதுளம் பழம் - பகை நீக்கம்.
17. நாரத்தம் பழம் - சற்புத்தி.
18. எலுமிச்சை - நோய் நிவாரணம்.
19. இளநீர் - மகப்பேறு.
20. கோரோசனை - நீண்ட ஆயுள்.
21-. பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல்.
22. கஸ்தூரி - வெற்றி உண்டாதல்.
23. பன்னீர் - சாலோக்யம்.
24. அன்னம் - ஆயுள், ஆரோக்கியம்.
25. பஞ்சகவ்யம் - ஆன்மசுத்தி
26. பஞ்சாமிர்தம் - செல்வம்.
மேற்கண்ட அபிஷேகங்களை எந்த அம்பாளின் மூர்த்தத்திற்குச் செய்தாலும் பலன்கள் ஒன்றே.
அம்பாளுக்குக் காலையில் சிவந்த நிறப்பட்டும், மாலையில் நீலம், பச்சை நிறமுள்ள புடவைகளும், அர்த்தசாமத்தில் வெண்ணிறப்பட்டில் சிவப்பு அல்லது பச்சை கலந்த கரை உள்ள பட்டுப்புடவைகளும் சாத்த வேண்டும்.
சிவப்பு நிற மலர்கள் அம்பாளுக்கு ஏற்றவை.
அம்பாளுக்கு அருகம்புல் சேர்க்கக்கூடாது.
No comments:
Post a Comment