Monday 26 August 2019

சர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் உங்களுக்கு தெரியுமா ?


விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை வணங்கினால், நம் விக்னகங்கள் அனைத்தும் தீரும் என்பது உறுதி. 

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோயிலான சங்கரன்கோவில், சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலில் சர்ப்ப விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

இந்த சர்ப்ப விநாயகரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இக்கோயிலின் உள்பிராகாரத்தில் கன்னி மூலையில் சந்நிதி கொண்டுள்ள இந்த விநாயகர் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

அதுமட்டுமின்றி, இடது கையால் சர்ப்பத்தின் தலையைப் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment