Monday 19 August 2019

அறிவு காட்டும் பாதையில் செல் !

Image result for வேதாத்ரி மகரிஷி
* இன்முகத்துடன் பேசினால் உலகமே உங்களுக்கு வசமாகி விடும்.
* கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் நிம்மதியாக வாழலாம்.
* உணர்ச்சி வசப்பட வேண்டாம். அறிவு காட்டும் பாதையில் முன்னேறிச் செல். 
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு; இதுவே நல்லவர் இயல்பு.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. 
* முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது.
* வஞ்சகர் எதிரியாகி விடுவதில் வியப்பில்லை; நண்பராக வளர்ந்தால் தான் பிரச்னையே. 
* தீர்க்க முடியாத துன்பம் எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறியாதவராக பலர் உள்ளனர். 
* வாழ்வு சிக்கல் நிறைந்த போராட்டம். உடலும், உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல் தானே.
* வாழ்த்துவது வீண் போகாது. வாழ்த்துவதால் நம்மை சுற்றிலும் நல்ல அலைகள் உண்டாகும்.
* ஒழுக்கமே உயர்வதற்கான வழி. இதை காக்கும் கவசமே திருமணம் என்னும் பந்தம். 
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை பயத்தால் சிலர் திருந்தியது போல இருக்கலாம். 
* எந்த சூழலிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவரை ஞானி என்றே சொல்ல வேண்டும். 
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். மாறாக வெறுப்பை ஒழித்தால் வாழ்வு மேன்மை பெறும். 
* ஆசையை ஒழிக்க யாராலும் முடியாது. அதற்கு தேவையும் இல்லை. அதை சீர்படுத்துவது சிறப்பு. 

-வேதாத்ரி மகரிஷி

No comments:

Post a Comment