சத்யபாமா, ருக்மணி இருவரில் கிருஷ்ணர் மீது யார் அன்பு மிக்கவர் என்பதில் போட்டி வந்தது. நாரதரின் ஆலோசனையின்படி கிருஷ்ணருக்கு துலாபாரம் வைத்து தன் அன்பை நிரூபிப்பதாக பாமா முடிவு செய்தாள்.
துலாபாரம் என்றால் இக்காலம் போல அரிசி, பழம், காசு, வெல்லம் என பொருள் வைப்பதல்ல. தங்கத்திலே துலாபாரம்! அதற்காக தராசு கொண்டு வரப்பட்டது.
ஒரு தட்டில் கிருஷ்ணர் உட்கார, சத்யபாமா தன்னிடமிருந்த தங்க நகைகளை மறு தட்டில் வைக்கத் தொடங்க, கிருஷ்ணருக்கு ஈடாக தட்டு உயரவே இல்லை.
தன் பெருமையை நிலைநாட்ட தாய் கொடுத்த அனைத்து சீதனங்களையும் வைத்தும் கூட, இம்மியும் தட்டு நகரவில்லை.
இந்நிலையில் அங்கு வந்த ருக்மணி நடந்ததைக் கண்டாள்.
அருகில் இருந்த மாடத்தில் துளசியை பறித்தாள். கிருஷ்ணரின் பாதம் தொட்டு வணங்கி, தன் கையில் இருந்த துளசியை ஆபரணத்தின் மீது வைத்தாள்.
என்ன ஆச்சர்யம்... தராசின் தட்டு உடனே கீழே சென்றது.
அந்தஸ்தை நிலைநாட்ட விரும்பிய பாமாவின் தங்கத்தை விட, ருக்மணி அன்பால் அளித்த துளசிக்கு சக்தி அதிகம் என்பது நிரூபணம் ஆனது.
No comments:
Post a Comment