Wednesday, 21 August 2019

கிருஷ்ண அவதாரம் எதற்காக நிகழ்ந்தது ?

Image result for lord krishna

கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. அப்போது,“ கம்சா! உன் தங்கையின் கர்ப்பத்தில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை கொல்வான்'' என அசரீரி ஒலித்தது.

கம்சன் மணமக்களை சிறையில் அடைத்தான். அவர்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை கொன்றான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது சிறையின் கதவுகள் தானாக திறந்தன. 

வசுதேவர் கூடை ஒன்றில் குழந்தையை சுமந்து கொண்டு ஆயர்பாடி நோக்கிப் புறப்பட்டார். யமுனை நதியும் வழிவிட்டது. யசோதை, நந்தகோபர் தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்தார். 

அவர்களுக்குப் பிறந்த' மாயா' என்னும் பெண் குழந்தையை எடுத்து வந்தார். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக வசுதேவர் கம்சனிடம் தெரிவித்தார். இருப்பினும் அவன் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி வானத்தை நோக்கி எறிந்தான். 

அக்குழந்தை துர்கையாக காட்சியளித்து, “ அடே கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் ஆயர்பாடியில் வளர்கிறான்'' என எச்சரித்து மறைந்தாள். 

அதன்படியே கிருஷ்ணரால் கொல்லப்பட்டான் கம்சன். 'தீயவர்களை அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் யுகம் தோறும் நான் அவதரிப்பேன்' என்ற நியதியின்படி அதர்மம் உலகில் தலையெடுக்கும் போதெல்லாம் பூமியில் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.

No comments:

Post a Comment