Sunday 24 September 2017

திலோத்தமா என்றால் என்ன அர்த்தம்?


ழகான பெண்களை ரம்பை, ஊர்வசி, திலோத்துமைக்கு ஒப்பிடுவது வழக்கம். இவர்களில் திலோத்துமாவுக்கு என்ன பொருள் தெரியுமா?

சுந்தன், உபசுந்தன் என்ற அசுர சகோதரர்கள் பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்து வரம் பெற்றனர். அவர்கள் தங்கள் ஒற்றுமையால், யாராலும் அழிவு வராத வரத்தைப் பெற்றனர். இதனால், தேவர்களையும், சாதுக்களையும் கொடுமைப்படுத்தினர். அவர்களை அழிக்க திலோத்துமவை பிரம்ம தேவர் படைத்தார். "திலம்' என்றால் "எள்'. "எள் அளவும் குறையாத அழகை பெற்றவள்' என்பதால் இப்படி பெயர் ஏற்பட்டது. திலோத்துமாவைப் படைத்த பிரம்மனே அவளது அழகில் மயங்கி தன்னுடைய சக்தியையும், படைப்புத் தொழிலுக்கான அருகதையையும் இழந்தார். பின்னர் மனம் வருந்தி, படைப்புத் தொழிலை மீண்டும் பெற பூலோகம் வந்து ஒரு காட்டில் தவமிருந்தார். சிவனும், அம்பாளும் காட்சி தந்து படைக்கும் தொழிலை மீண்டும் அருளினர். 

No comments:

Post a Comment