Saturday, 24 June 2017

வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு !

வலம்புரிச் சங்கு ! க்கான பட முடிவு

கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள். சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக்  குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில்  எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான். 

அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம்  நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம்  உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி  திருமணம் நடந்துவிடும். 

அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும். பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே  வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில்  தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும்  நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்னைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.

No comments:

Post a Comment