Wednesday 28 June 2017

பலன் தரும் ஸ்லோகம்

narasimha க்கான பட முடிவு

எதிலும் வெற்றி பெற, மகிழ்ச்சியான வாழ்வு அமைய ;

வாமாங்கஸ்தஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸன்னம் ந்ருஹரிம் பஜே.

பொதுப் பொருள்: தன் இடதுதொடையில் திருமகளை இருத்தி சங்கு சக்கரம் ஏந்திய திருக்கரங்களோடு பட்டாடை தரித்து சர்வாலங்காரங்களுடன் பிரசன்னமாய் உள்ள நரஹரியான நரசிம்மனை பஜிக்கிறேன். நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பது பழமொழி. பிரகலாதனின் பக்திக்கு இரங்கி தூணிலும் துரும்பிலும் நீக்கமற நிறைந்து ஹிரண்யகசிபுவைக் கொன்று பிரகலாதனைக் காத்த பரமகருணாமூர்த்தி நரசிம்மன். 

செல்வ வளம் பெருக ;

நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை 
பத்மாயை ஸததம் நமஹ
நமோ விஷ்ணு விலாஸின்யை
பத்மத்ஸாயை நமோ நமஹ
மகாலட்சுமி துதி

பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். 

ஆபத்துகள் விலக ;

ஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத்.
பலராமர் காயத்ரி

பொதுப்பொருள்: ஹலாயுதம் எனும் கலப்பையை எப்போதும் ஏந்தியருள்பவரே. மகாபலம் பொருந்தியவரே. பலராமராகிய தங்களை தியானிக்கிறேன். பலராம ஜயந்தியன்று இத்துதியை 108 முறை பாராயணம் செய்தால் ஆபத்துகள் விலகும்.

குடும்ப ஒற்றுமை ஓங்க ;

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம் 
பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம் 
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம் 
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி: 
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.
ஸ்ரீதேவி துதி

பொதுப் பொருள்: 

மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

தம்பதியர் ஒற்றுமை ஓங்க ;

சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ
கவிராஜ பண்டிதரின் ஸெளந்தர்ய லஹரி தமிழாக்கம்

பொதுப் பொருள்: சிவசக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சீவன் சிவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். அந்த சித்சக்திதான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக் கிடக்காமல் வெளியே வந்தால்தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் பிரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும். ஆகையால், சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக் காத்து ரட்சிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment