Tuesday, 20 June 2017

ஐய்யப்பனை சாஸ்தா என அழைப்பது ஏன் ?

தொடர்புடைய படம்

சாஸ்தா என்ற சொல் தற்போது தென்மாவட்ட மக்களால் சாத்தா என்று அழைக்கப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என பொருள். ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்கள் தனித்து வர முடியாது. கூட்டமாகத்தான் வரமுடியும். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.  ஒரு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றார்கள். இப்போது செல்வதைப் போல லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்றதில்லை. அப்படி செல்லும்போது கோடரி, ஈட்டி முதலிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள். அப்படி சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர் தான் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாக கொள்ளும் வழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது. இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்றுதான் அழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment