Tuesday, 20 June 2017

தியானம் என்றால் என்ன ?

தியானம் க்கான பட முடிவு

நினைப்பு ஏதுமற்று இருத்தலே தியானம் எனப்படுவது. ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடிவரும் எண்ணங்களே உமது மனத்தைக் கலக்குகின்றன. ஒரே ஒரு  நினைப்பை மட்டும் விடாப்பிடியாய் எண்ணத்தில் இறுத்தி, அவ்வாறே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால் மற்ற நினைப்புக்கள் அகன்றுவிடும்.  சாதகனின் ஆன்மிக வளர்ச்சிக்குத் தக்கவாறு தியான முறைகளும் மாறுபடும். அகமுக தியானத்திற்கு அருகதையுள்ள ஒரு நபர் தியானத்தை நேரடியாக ஆன்ம  விசாரணையில் செலுத்தலாம். நினைப்பவன் இவ்வாறு தன் மூலத்தை நாடினால் வேறு நினைப்புக்கள் எழா.

ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ  அவற்றிலிருந்து உங்களை தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும்  போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல் தான். மனிதர்கள் தாங்களாகவே  எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். 

ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில்  அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல, நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம்  முடிவு. வெளியிலிருந்து சேகரித்த உடல், மனம் இவற்றுக்கும் உங்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உணர்ந்து நீங்கள் தியானத்தன்மையில்  இருந்தால், அவை இரண்டையும் எப்படி உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் அதுவே நீங்களல்ல. உங்கள்  அனுபவத்தில் இந்த இரண்டோடும் அடையாளம் கொள்ளாமல் இருந்தால், துன்பம் என்பதே இருக்காது. 

இது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். ஒருவர் விருப்பத்தோடு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம். இந்த சூழ்நிலையை நமக்குள் எப்படி உருவாக்குவது  என்பதற்கு ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது. எனவே இதை நாம் எல்லாவகையான மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அதை பயன்படுத்திக்  கொள்ளப் போகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. தியானம் எனும் போது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. எனவே நமது வேலை,  தியானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான். இது ஏதோ மலைக் குகைகளுக்கு செல்வதைப் பற்றியல்ல இது, துன்பங்களில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு வாழக் கற்றுக் கொள்வது. 

No comments:

Post a Comment