பாண்டிய மன்னன் ராஜசேகரன் அறுபத்துமூன்று கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.பரதக்கலை மட்டும் தெரியாது. ஒரு சமயம் சோழநாட்டுப் புலவன் ஒருவன் எங்கள் கரிகாலனுக்கு பரதக்கலை தெரியும்.அதில் வல்லவன் அவன் என்று ஏகத்திற்கும் பெருமையாக பேசினார். இதைக் கேட்ட பாண்டியனுக்கும் பரதம் கற்கும் ஆசை ஏற்பட்டது.ஆனால் பயிற்சி காலத்தில் உடல் வலியால் அவதிப்பட்டான்.நமக்கே இப்படி இருக்கின்றதே சதா சர்வகாலமும் வெள்ளியம்பலத்தில் நடனம் ஆடுகின்ற இறைவனின் திருவடிகள் எவ்வளவு வலிக்கும் என மிகுந்த கவலையுற்றான். சிவராத்திரியன்று நடராஜப் பெருமானை கண்ணீர் மல்க வணங்கி எம்பெருமானே நடனம் ஆடும்போது பூப்போன்ற தங்கள் பாதங்களுக்கு வலிக்குமே எனவே நின்ற திருவடியை எடுத்து வீசி அடியேன் காணும்படி கால் மாற்றி தாங்கள் ஆடவேண்டும்.இல்லையேல் நான் இங்கேயே உயிரி துறப்பேன் என வேண்டினான். பாண்டியனின் அன்பிற்கு மனம் இரங்கி சிவபெருமான் கால் மாறி ஆடிக்காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
Wednesday, 21 June 2017
கால் மாற்றி ஆடிய ஈசன் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment