Tuesday, 20 June 2017

திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுவது ஏன் ?

திருக்கார்த்திகை தீபம் க்கான பட முடிவு

கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது.


தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பது. எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி எய்தும் என்பது ஆன்றோர் மொழி. எனவே கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

No comments:

Post a Comment