10-ந்தேதி (செவ்வாய்) :
* பிரதோஷம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* திருவண்ணாமலை சிவபெருமான் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் வீதி உலா.
* சகல சிவன் கோவில்களிலும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
11-ந்தேதி (புதன்) :
* முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருவையாறு சிவபெருமான் பவனி.
* சமநோக்கு நாள்.
12-ந்தேதி (வியாழன்) :
* அமாவாசை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் விருட்ச சேவை.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி) :
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* பத்ராச்சலம் ராமபிரான் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
14-ந்தேதி (சனி) :
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
15-ந்தேதி (ஞாயிறு) :
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* திருவண்ணாமலை சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.
16-ந்தேதி (திங்கள்) :
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர், மிலட்டூர் விநாயகப்பெருமான் ஆலயங்களில் சுவாமி வீதி உலா.
* மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
No comments:
Post a Comment