மூலவர் : பிரத்தியங்கிராதேவி
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
முகவரி : அருள்மிகு பிரத்தியங்கிராதேவி திருக்கோயில், திருவிசநல்லூர், திருவிடைமருதூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்.
அம்மன் சிறப்பு : நரசிம்மர் ஹிரண்யகசிபுவை அழித்தப் பிறகு அடங்காத கோபத்துடனே இருந்தார். அதனால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை அடைந்து தங்களை காக்கும் படி வேண்டினர். சிவபெருமானும் நரசிம்மரை அடக்க சரபம் என்றும் பறவை வடிவினை எடுத்து சண்டையிட்டார். அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையின் சக்தியை தோற்றுவித்தார். இப்பறவையானது, சரப பறவைக்கு எதிரியாகும். எனவே சரபர் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். இத் தேவி கண்ட பேருண்டத்தினை விழுங்கினார். அதன்பின்பு சரபர், நரசிம்மரை தோற்கடித்தார்.இந்த நிகழ்வு குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் என்ற நூலில் உமாபதி சிவம் குறிப்பிட்டுள்ளார். பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருத்தியாவார்.
தல சிறப்பு : கும்பகோணத்தை அருகே திருவிசநல்லூரில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி வேறு எங்கும் காண முடியாத வகையில் சுமார் 9 அடி உயரத்தில் சிம்ம வாகத்தில் 5 முகங்களோடு, 10 கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை அன்று காலை 11 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பகை அகலும், துன்பம் நீங்கி பல நன்மைகள் கிட்டும்.
No comments:
Post a Comment