Tuesday, 17 July 2018

இந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை

17-ந்தேதி (செவ்வாய்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், தங்க சப்பரத்தில் சுவாமி புறப்பாடு.
* குரங்கணி முத்துமாலையம்மன் கோவில், நாராயண சுவாமி தீர்த்தம்.
* மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (புதன்) :

* சஷ்டி விரதம்.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாண வைபவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (வியாழன்) :

* மதுரை கள்ளழகர் ஆலயத்தில் ஆடி உற்சவம் ஆரம்பம்.
* வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவில் உற்சவம் தொடக்கம்.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி காலை இந்திர விமானத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

20-ந்தேதி (வெள்ளி) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதாரக் காட்சி, சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

21-ந்தேதி (சனி) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சேரமான் பெருமாள் கயிலாயம் புகுதல்.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதாரம், அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

22-ந்தேதி (ஞாயிறு) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.
* வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மதுரை மீனாட்சி அம்மன் தங்க குதிரையில் திருவீதி உலா.
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி இரவு தோளுக்கினியானில் பவனி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (திங்கள்) :

* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கு.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி, இரவு புஷ்ப விமானத்தில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.
* வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.

No comments:

Post a Comment