ஆயக்கலைகள் அறுபத்து நான்கில், நடனக்கலையும் ஒன்று. பரதக்கலை என்பது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் கலை மட்டுமல்ல, விரல் அபிநயங்களாலும், விழிகளின் அசைவுகளினாலும், உடலின் நளின பாவத்தாலும், முகபாவனையாலும் கருத்துக்களையும், நவரசங்களையும் எடுத்துரைக்கும் அற்புதமானதாகும். அந்த ஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.
தில்லையில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய ஐந்து சபைகள் உள்ளன. இந்த சபைகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நாட்டிய சபாக்களில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்து புகழ்கூடும்.
No comments:
Post a Comment