Friday 6 July 2018

கேது பகவானுக்கு உகந்தவை

கேது பகவானுக்கு உகந்தவை

‘ராகு கொடுப்பார்.. கேது கெடுப்பார்’ என்பது ஜோதிட பழமொழி. இருந்தாலும் கேது, ஞானக்காரன் என்பதால் அவரது பங்குக்கு சில நன்மைகளைச் செய்வதில் இருந்து தவறுவதில்லை. கேது தரும் நன்மைகள் நிரந்தரம் இல்லை என்றாலும், அதனை தக்க வைத்து கொள்ள போதிய புண்ணியபலம் இருக்க வேண்டும். புண்ணிய பலத்தை தரக்கூடிய குரு, ஒருவரது ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். குரு நன்றாக இருந்தால், கேது தரும் நன்மைகளால் தலைமுறைகள் மேன்மை அடையக்கூடும்.

ஒருவரது ஜாதகத்தில் கேது யோகம் தரக்கூடிய இடத்தில் இருந்தால், பல நன்மைகள் உண்டாகும். மனிதனாகப் பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை தரக்கூடிய அளவுக்கு கேதுவிற்கு சக்தி உண்டு. உலகில் யாருக்கும் புலப்படாத பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதற்கு கேதுவே காரணம். ஒருவர் ஈடுபட்டுள்ள துறைகளில் முதன்மை ஞானத்தை பெறக்கூடிய சக்தியை தருபவர் கேதுவே. உடலை பார்த்தவுடன் நோய்களை பற்றி கூறும் வித்தக கலையும், முகத்தை பார்த்த உடனே எதிர்கால கணிப்புகள் கூறும் கலையையும் தருபவர் கேது பகவான் தான்.

ஏழு லோகங்கள் பற்றி உணரும் சக்தியை கேது தான் தருகிறார். மரம், செடி, கொடிகளுடன் பேசும் ஆற்றலை பெறுவதும், ஜீவராசிகளிடம் பேசும் ஆற்றலை தருவதும், மூலிகை செடிகளுடன் பேசும் சக்தியை தருவதும் கேது தான். மகாமுனி, மகாதபசி ஆகியோருக்கு மகாதவம் புரியும் சக்தியை தருவதும் இவரே. மந்திர வித்தைகள் கற்பதும், சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் பலிதமாவதற்கும் கேதுதான் காரணம். ஞான வைராக்கியத்தை தருவது, அதிர்ஷ்டகரமான.. வளமான வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்வதை உணர்த்துவது, விரும்பியபடி வாழ்க்கையோடு சகல சுகத்தை தருபவர் கேதுவே. புதினங்கள் படைப்பதும், வேதாந்த ரகசியங்கள் ஆராய்ச்சி செய்யும் ஞானத்தை கொடுப்பவரும் கேது தான்.

கேதுவுக்குரியவை

காரகன் - மாதாமகன்
தேவதை - இந்திரன்
தானியம் - கொள்ளு
உலோகம் - துருக்கல்
நிறம் - சிவப்பு (செந்நிறம்)
குணம் - தாமஸம்
சுபாவம் - குரூரர்

சுவை - புளிப்பு
திக்கு - வட மேற்கு
உடல் அங்கம் - உள்ளங்கால்
தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
நோய் - பித்தம்
பஞ்சபூதம் - - நீர்

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 ஆகிய இடங்களை கால் பங்கும், 5, 9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4, 8 ஆகிய இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.
பாலினம் - அலி

உபகிரகம் - தூமகேது
ஆட்சி ராசி - இல்லை
உச்ச ராசி - விருச்சிகம்
மூலத்திரிகோண ராசி - இல்லை

நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
சமமான ராசி - இல்லை
பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்
நீச்ச ராசி - ரிஷபம்
திசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்

நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி
சமமான கிரகங்கள் - புதன், குரு
பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிகமான பகையான கிரகம் - சந்திரன் செம்பாம்பு, கதிர்பகை, ஞானன்
நட்சத்திரங்கள் - அஸ்வினி, மகம், மூலம்

No comments:

Post a Comment