Tuesday, 10 July 2018

தோஷங்கள் விலகுவது எப்படி?

தோஷங்கள் விலகுவது எப்படி?

ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாகும். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச் சன்னதி தாயாரான கோமளவல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டையும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சன்னதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர்களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள். ஆழ்வார்கள், தும்பிக்கையாழ்வார், சத்தியன், அச்சுதன், அநிருத்தன், வைஷ்ணவி ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

ஆண்டாளும் எழில்கோலத்தில் காட்சி தருகிறார். வைகானச ஆகம விதிகளின்படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின்றன. தல விருட்சமாக புன்னை மரமும், தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.

ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்பதால், ராகு-கேது தோஷ நிவர்த்தி தலமாகவும், ரங்கநாதப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி அளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது. திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும். தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வவும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற்றுவிடுகிறது.

No comments:

Post a Comment