Sunday 22 July 2018

சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டியது

சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டியது

சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்டதை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்... 

ஒளி வீசக்கூடிய உடல் அமைப்புக் கொண்டவரும், மின்னல் போன்ற கண்களைப் பறிக்கும் ஆடைகளை அணிந்தவரும், விசாலமான கண்களைப் பெற்றவரும், என்றென்றும் இளமையுடன் திகழ்பவரும், மிகவும் அழகானவரும், பாஞ்ச ஜன்யம், கௌமோதகி, சாரங்கம் என்ற ஆயுதங்களை நட்பாகக் கொண்டவரும், 

ஆதிசேஷனுக்குப் பிரியமானவரும், சங்கு, சக்கரம், வாள், பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏற்றியவரும், தன்னை எரித்தவர்களை வதம் செய்பவரும், திருட்டுப் பயத்தையும், அரசாங்கத்தாரால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும், எதிரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் போக்குபவரும், ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயர் கொண்டவரும், கோபம் அடைந்தவரும், பிரளய காலாக்னி போன்ற ஜ்வலிக்கக்கூடிய பேரொளி பெற்றவரும், அழகிய பட்டுப் பீதாம்பரங்களைத் தரித்தவரும், 

திருமண்ணால் நிரப்பப்பட்டு உடல் அமைப்பினைக் கொண்டவரும், நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் சஞ்சாரம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவரும், 

அழகான திருக்கைகள் ஆறினைப் பெற்றவரும், தீட்சண்யமான தன் பார்வையின் ஒளியினால் முதலையாகி வந்த கந்தர்வனை சம்ஹரித்தவரும், மஹா வீரரும், 

மந்திர கோஷங்களில் நிறைந்திருப்பவரும், ஸ்ரீ ராமாவதாரக் காலத்தில் பரதனாகத் திருவவதாரம் செய்தவரும், இராவணன் போன்றவருக்குப் பீதியை அளித்தவரும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்ற நாம தேயத்துடன் பகவான் ஸ்ரீ ஹரிவிஷ்ணுவின் தாசானுதாசனாக மாறி நிற்பவருமான ஸ்ரீ சுதர்ஸனரே, உம்மைத் தியானிக்கிறேன்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறையில் சித்திரரத வல்லப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். 

இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

No comments:

Post a Comment