கோயிலுக்குச் சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோயில் பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கம்.
எல்லோரும் மூன்று முறை தானே சுற்றுகின்றனர். நாமும் 3 முறை சுற்றினால் போதும் என்று நினைத்துச் சுற்றி வருதல் கூடாது. கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்துகொண்டு சுற்றி வருவது அவசியம். வாங்கப் பார்க்கலாம்.
கோயில் பிராகாரத்தை சுற்றுவதின் பலன்கள்
• ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
• மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
• ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
• ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும்.
• ஒன்பது முறை வலம் வருவதால் (சத்துருநாசம்) எதிரிகள் விலகுவர்.
• பதினொரு முறை சுற்றினால் ஆயுள் விருத்தியாகும்.
• பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் சித்தியாகும்.
• பதினைந்து முறை வலம் வந்தால் தன ப்ராப்தி உண்டாகும்.
• பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். விவசாயம் செழிக்கும்.
• பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.
• இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
• இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.
• நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
• இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment