வாழ்க்கையில் சுகம் என்ன என்பதை மறந்தும்கூட காணாதவர்கள் லலிதா சகஸ்ரச நாம ஜெபத்தின் மூலம் சுகத்தை நிச்சயமாக அடையலாம். ஓம் க்லீம் சர்மதாயின்யை நம என்பது மந்திரம்.
லலிதா சகஸ்ரநாமத்தில் ஒளிவிடும் இந்த மந்திரம் மந்திரங்களின் ஆணிவேர் என்றும் கூறலாம். சுக்ல சதுர்தசியில் மாலை வேளையில் நாம பாராயண பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீசக்ர மேரு, பூபுரசக்கரம் இவைகளில் அருச்சிக்கலாம். சிறப்பாக நுனிகிழியாத ‘தாய் வாழை’ இலையின் நடுப்பகுதியில் கைப்பிடி அளவு சந்தன உருண்டையை வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது திரிகடிகை பிரமாணம் சந்தன உருண்டையை வைத்துக் கொள்ளலாம். இதைத் திரிகோணாகாரமாக கோபுரம் போல் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூந்தளிர் திரிதளவில்வத்தின் மீது இதை வைக்க வேண்டும்.
ஆவாகன உபசாரங்கள் செய்து அர்ச்சனையில் ஸ்ரீமத் லலிதா சகஸ்ர நாம அருச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜை முடித்த பிறகு அந்த சந்தனத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் நெற்றியில் பஞ்சதசாட்சதி சொல்லித் தரித்துக் கொள்ள வேண்டும். இது முகவசீகரம் தரும். காரிய வெற்றி தந்து உதவும். செய்யும் பணியில் செல்வாக்கைத் தரும்.
பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு லலிதா சகஸ்ர நாமத்தை படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் கயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
No comments:
Post a Comment